ராஜா ராணி விட்டு விலகிய மருமகள் ஆலியா.. புது மருமகள் யார் தெரியுமா.?

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் நிஜவாழ்க்கையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆலியா மானசா இந்த சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிரசவத்திற்காக ஆலியா செல்வதால் அவருக்கு பதில் தற்காலிகமாக சந்தியா கதாபாத்திரத்தில் நடிகை ரியா நடிக்க உள்ளார்.

நடிகை ரியா மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் அவர்களின் நெருங்கிய தோழியாக இருக்கும் ரியாவிற்கு ராஜா ராணி2 சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

இதைப் பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியான நிலையில், அடுத்த சந்தியா யார் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் ராஜா ராணி2 சீரியல் ப்ரோமோ தற்போது ரிலீசாகி அதில் ரியா சந்தியாவாக வித்தியாசமான கெட்டப்பில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

அதாவது தன்னுடைய சிறுவயதில் கனவை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியா, மாமியார் சிவகாமியின் எல்லா நிபந்தனைகளுக்கும் ஒத்துக்கொள்கிறார்.

ஏனென்றால் குடும்பத்திற்கு நல்ல மருமகளாக முதலில் இருந்து காட்,டு அதன் பிறகு போலீஸ் கனவை பற்றி சிந்திக்கிறேன் என மாமியார் சொன்னதை அடுத்து தற்போது சந்தியா குடும்பப் பொறுப்புகளை தாமாக முன்வந்து ஏற்று அதை செயல் படுத்திக் கொண்டிருக்கிறார்.

மேலும் சரவணன், சந்தியா போலீஸ் ஆனாலும் குடும்பத்திற்கு நல்ல மருமகளாக இருப்பார் என்பதை அம்மாவிற்கு புரிய வைப்பதற்காகவே சிவகாமி செய்யும் அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

santhiya
santhiya

இதன்பிறகு சந்தியா, சிவகாமியின் சம்மதத்துடன் ஐபிஎஸ் அதிகாரியாக மாறப்போகும் அதிரடி காட்சி இனிவரும் நாட்களில் பார்க்கப்போகிறோம். இருப்பினும் சந்தியாகப்பர் நடித்துக்கொண்டிருந்த ஆல்யா மானசாவை அவருடைய ரசிகர்கள் இனி வரும் நாட்களில் மிஸ் பண்ண போகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்