ராஜா ராணி-2 வில்லியா இது.? தொடை அழகை காட்டி மயக்கும் அர்ச்சனா

விஜய் டிவியில் முன்னணி சீரியலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி2 சீரியலில் தற்போது காதல் ட்ராக் ஓடிக்கொண்டிருக்கிறது. பிடிக்காமல் கல்யாணம் செய்து கொண்டார் கதாநாயகி சந்தியாவும், கதாநாயகன் சரவணனும் தற்போது காதலிக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் அவர்களுக்கு இடையே நிலவும் ரொமான்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இவர்களை பிரிக்கும் நோக்கத்தில் செயல்படும் ராஜா ராணி2 சீரியல் வில்லி அர்ச்சனா, தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை சிறப்பாக காட்டிக் கொண்டிருக்கிறார்.

இவர் சீரியலில் எதார்த்தமாக செய்யும் ஒவ்வொரு செயல்களும் ரசிகர்களால் பெரிதும் பேசப்படுகிறது. சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய அர்ச்சனா, விஜய் டிவியில் நீயா நானா’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அதன் பிறகு ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

பின்பு விஜய் டிவியில் முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சிகளிலும் தற்போது சீரியல்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். அத்துடன் இவர் சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு கொண்டிருக்கிறார்.

raja-rani-2-archana-cinemapettai
raja-rani-2-archana-cinemapettai

அதிலும் குறிப்பாக இவர் செய்யும் ரில்ஸ் மற்றும் போட்டோ ஷூட் கள் அனைத்தும் இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. எனவே இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் குட்டி டிரஸ்ஸில் ஹைஹீல்ஸ் அணிந்தபடி கையில் கப்புடன் செம க்யூட்டா போஸ் கொடுத்துள்ளார்.

ஹீரோயின் ரேஞ்சுக்கு தன்னுடைய அழகை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அர்ச்சனாவிற்கு கூடிய விரைவில் பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அவருடைய ஒவ்வொரு புகைப்படத்தில் ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட்டுகளை வார்த்தைகளால் வர்ணிக்கின்றனர். ஒரு சிலர் கவிதை மழையையும் பொழிந்து கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்