Connect with us
Cinemapettai

Cinemapettai

மாத்தி மாத்தி கழுவி ஊத்தும் நம்ம வீட்டு திருவிழா.. ராஜா ராணி-2 உடன் இணையும் பாரதிகண்ணம்மா

raja-rani2-bharathikannamma

Tamil Nadu | தமிழ் நாடு

மாத்தி மாத்தி கழுவி ஊத்தும் நம்ம வீட்டு திருவிழா.. ராஜா ராணி-2 உடன் இணையும் பாரதிகண்ணம்மா

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் ஹீரோயின்கள் அடுத்தடுத்து சீரியலில் இருந்து விலகி உள்ளதால், விஜய் டிவி டிஆர்பி சற்று சரிவை சந்தித்து வருகிறது. அதை சரி செய்யும் விதமாக விஜய் டிவி பல சிறப்பு நிகழ்ச்சிகளை தற்போது ஒளிபரப்பி வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வைத்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை நம்ம வீட்டு திருவிழா எனும் சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.

அதில் ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக ஆரம்பிக்கும் இந்த நிகழ்ச்சியை மணிமேகலை, அர்ச்சனா, பாபா பாஸ்கர், தாடி பாலாஜி ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசும் ஆலியா மானசா, ராஜா ராணி 2வில்  நாயகனாக நடிக்கும் சித்து தான் நடிக்கும் பொழுது சுற்றி ஏதாவது சிறிய சத்தம் கேட்டால் உடனே பக்கத்தில் உள்ள பொருட்களை போட்டு உடைத்து விடுவார் என்று ஜாலியாக கூறுகிறார். மேலும் சித்துவை போன்ற ஒரு ஹாண்ட்சம் ஹீரோவை நான் பார்த்ததில்லை என்று புகழ்ந்துள்ளார்.

மேலும் பாரதி கண்ணம்மா வில் சௌந்தர்யாவாக நடிக்கும் நடிகை ரூபஸ்ரீ தனக்கு ஜோடியாக நடிக்கும் ரிஷியை நீ ரொம்ப பொய் சொல்கிறாய் என்று கூறி அங்கிருக்கும் ஒரு பானையை உடைக்கிறார். புதிய கண்ணம்மாவாக நடிக்கும் நடிகை வினுஷா தேவியும் இந்த குழுவினருடன் பங்கு பெறுகிறார்.

கலக்கலாக வெளியாகியிருக்கும் இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விஜய் டிவி பிரபலங்கள் என்றாலே மாத்தி மாத்தி கழுவி ஊற்றி சுவாரசியத்தை ஏற்படுத்துவார்கள் அந்த வகையில் தற்போது சீரியல் பிரபலங்கள் தங்களை கழுவி ஊற்றி கொள்கின்றனர். வரும் 28ஆம் தேதி இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். நம்ம வீட்டு திருவிழா

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top