புதன்கிழமை, நவம்பர் 13, 2024

புது சந்தியா வந்த நேரம் சரியில்லை போல.. ராஜா ராணியில் சரவணனுக்கு நடந்த கொடுமை

ஆலியா மானசா ராஜா ராணி 2 சீரியலில் இருந்து தற்போது விலகியதை அடுத்து சீரியலை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் விஜய் டிவி சீரியலை விறுவிறுப்பாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதுகுறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதில் சரவணனின் ஸ்வீட் கடைக்கு போலீஸ் ரைடு வருகிறது. அங்கு கலப்படம் இருக்கிறது என்று கூறி சரவணனை போலீஸ் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். இதனால் மொத்த குடும்பமும் பதறி போகிறது. மேலும் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லும் சரவணனை அவர்கள் கண்டபடி அடிக்கின்றனர்.

இதைக் கண்டு துடித்துப் போகும் சந்தியா கதறி அழுகிறார். உங்களின் இந்த நிலமைக்கு நான் தான் காரணம் என்று கூறும் சந்தியாவிடம் சரவணன் உங்களைப்போல திறமை இருப்பவர்கள் போலீஸ் வேலைக்கு வராமல் ஏதேதோ காரணம் சொல்லி ஒதுங்கிப் போவதால் தான் இங்கு இவ்வளவு அநியாயங்களும் அக்கிரமங்களும் நடக்கிறது என்று சொல்கிறார்.

இந்த வார்த்தையால் கொதித்தெழுந்த சந்தியா மறுநாளே சரவணனிடம் நான் போலீஸ் வேலைக்கு போவதற்காக எக்ஸாம் எழுதப் போகிறேன் என்று கூறுகிறார். இதனால் சந்தோஷமாகவும் சரவணன் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து சொல்கிறார்.

குடும்பத்துக்காக தன் கனவை விட்டுக்கொடுத்த சந்தியா தற்போது போலீசாக போகிறார். அவரின் இந்த முடிவை மாமியார் சிவகாமி எப்படி ஏற்றுக் கொள்வார் அதை சரவணன் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது போன்ற காட்சிகள் தான் ராஜா ராணி சீரியலில் அடுத்தடுத்து வர இருக்கிறது.

இதனால் இந்த சீரியலில் விருவிருப்பு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ஆலியா மானசாவை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் இந்த புது சந்தியாவை ஏற்றுக் கொள்வார்களா என்பதும் அவருடைய நடிப்பைப் பார்த்து போகப் போக தெரிந்து விடும்.

- Advertisement -spot_img

Trending News