‘ராஜா ராணி’ சீரியலில் செண்பாவாக நடித்து வருபவர் நடிகை ஆல்யா மானசா. அப்பாவிப் பெண்ணாக நடிக்கும் செம்பாவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

semba

சினிமா நடிகைகளைப் போலவே தினமும் ரசிகர்களை என்டர்டெயின் செய்வது சீரியல் நடிகைகள் என்றே சொல்லலாம். சீரியல் நடிகைகளுக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இப்போது உள்ள சீரியல் நடிகைகள் தங்களது கதாபாத்திரத்தை தாண்டி தங்களது காஸ்ட்யூமில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். அப்பாவிப் பெண்ணாக நடிக்கும் இவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

ஆல்யா மானசா
‘ராஜா ராணி’ சீரியலில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆல்யா மானசா. இவரின் புடவை லுக் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. தற்போது ஆல்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தில், தலை முடியை பாதி கட் செய்து நியூ லுக்கில் இருக்கிறார் செம்பா. இதனைப் பார்த்த ரசிகர்கள் நன்றாக இருக்கிறது என்று கூறி வந்தாலும் ஒரு சிலர் ஏன் இப்படிச் செய்துள்ளீர்கள் என்று கேட்டு வருகின்றனர்.

‘இப்படி எல்லாம் போட்டோ போட்டீங்கன்னா உங்களை டைவர்ஸ் பண்ணிருவேன் பார்த்துக்கோங்க…’ என ஒரு தீவிர ரசிகர் செம்பாவுக்கு ரிப்ளை செய்திருக்கிறார்.

‘வாவ்… நேஷனல் டு இன்டர்நேஷனலா..? ஆனா, எனக்கு நீங்க ஹோம்லியா இருக்கிற லுக் தான் பிடிக்கும்’ என ஒரு ரசிகர் ரிப்ளை செய்திருக்கிறார்.

‘எப்படி போட்டோ போட்டாலும் லைக் பண்ணுவோம்னு நினைச்சிட்டியா லூசு…’ என ஒரு ரசிகர் ரிப்ளை செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  சாராயம் சிகரெட்லாம் அரசாங்கம் விற்பனை செய்வது நாட்டுக்கே அசிங்கம்: சீறிய பாலா