சூப்பர் ஹிட் படமாக அமைந்த ராஜா ராணி படத்தில் ஜெயிற்கு பதில் முதலில் நடிக்க இருந்தது சிவகார்த்திகேயன் தான் என்ற சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது.

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக இருப்பவர் அட்லீ. இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ராஜா ராணி. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆர்யாவின் திரை வாழ்விலே பெரும் வசூலை குவித்த படமும் இதுதான். இருந்தும், இப்படத்தின் கதை மௌன ராகத்தை ஒத்து இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டது. அதை தொடர்ந்து, வெளியாகிய அட்லீயின் இரண்டு படங்களிலுமே பழைய படங்களின் வாசனை வெகுவாக அடித்ததால், சமூக வலைத்தளத்தில் விமர்சனத்துக்கு உள்ளானார்.

இதெல்லாம் பழைய கதை தான். புதுக்கதைக்கு வருவோம். மிகப்பெரிய வெற்றியை பெற்ற ராஜா ராணி படத்தில் ஜெய் கதாபாத்திரத்தில் முதலில் சிவகார்த்திகேயன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இப்படத்தில் அவர் நடித்து இருந்தால் ராஜா ராணி படம் தான் அவரின் திரை வாழ்வில் முதல் படமாக இருந்து இருக்கும். ஆனால் அட்லீ என்ன நினைத்தாரோ சிவாவினை சந்தானம் நடிக்க இருந்த கதாபாத்திரத்திற்கு மாற்றினாராம். ஆனால், சில பல காரணங்களால் அந்த கதாபாத்திரத்தில் இருந்தும் அட்லீ, சிவாவை நீக்கி விட்டார். இத்தகவலை தற்போது சிவகார்த்திகேயனே ஒரு நிகழ்ச்சியில் கலகலப்பாக தெரிவித்து இருக்கிறார்.

Raja Rani

அதே வருடம் சிவா நடிப்பில் ராஜா ராணி வெளியீட்டிற்கு முன்னரே சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர் நீச்சல் படம் வெளியாகி விட்டது. இதில், தொடங்கிய அவர் திரைப்பயணம் இன்று வேலைக்காரன் படம் வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதே வேளையில், பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சயின்ஸ் பிக்‌ஷன் படம், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் என அவருக்கு படங்கள் வண்டிக் கட்டிக்கொண்டு இருக்கிறது. வாய்ப்பை விட உழைப்பு ஒன்றே போதும் என்பது சிவா விஷயத்தில் நிரூபிக்கப்பட்டு விட்டது என்பது மட்டும் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here