தனுஷுடன் இணைத்த ராஜா ராணி 2 பிரபலம்.. வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தற்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகன் சரவணனுக்கு அம்மாவாக சிவகாமி எனும் கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை பிரவீணா.

மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு இவர் தமிழில் கோமாளி, சாமி 2 உட்பட பல திரைப்படங்களில் அம்மா கேரக்டரில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் நடித்தாலும் சீரியலிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது பிரவீனா, தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் படப்பிடிப்பில் தனுஷுடன் இணைந்து நிற்கும் போட்டோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் நடிகர் தனுஷ் தற்போது இந்த வாத்தி திரைப்படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கு திரையுலகில் களம் இறங்குகிறார். இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

வெங்கி அட்லுரி இயக்கும் இந்த திரைப்படத்தில் சம்யுக்தா மேனன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் படுவேகமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக சோசியல் மீடியாவில் அறிவித்தார். இதனால் அதிர்ந்த பலரும் இது குறித்து பல கேள்விகளை எழுப்பினார். ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத தனுஷ் இந்த வாத்தி திரைப்படத்திற்காக ஐதராபாத் சென்றது குறிப்பிடத்தக்கது.

vaathi
vaathi
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்