Videos | வீடியோக்கள்
அதி பயங்கரமான திரில்லரில் மிரட்டும் ராஜா ரன்குஸ்கி படத்தின் சில நிமிட வீடியோ.!
Published on
இயக்குநர் தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜா ரங்குஸ்கி’. இந்த படத்தில் ஹீரோவாக ‘மெட்ரோ’ புகழ் சிரிஷ் நடித்துள்ளார். சிரிஷுக்கு ஜோடியாக அவரின் நண்பரான ‘சித்து +2’ புகழ் சாந்தினி ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் படத்தை ‘வாசன் புரொடக்ஷன்’ நிறுவனத்துடன் இணைந்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பர்மா டாக்கீஸ்’ மூலம் தரணிதரனே இதனை தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு யுவா என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி,படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தின் சில நிமிட காட்சியை பிரபல நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
