Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரைசா நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகும் திரில்லர் படத்தின் வெறித்தனமான டைட்டில், பர்ஸ்ட் லுக்

லாக் டவுனில் 18 நாளில் ரெடியான திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரைசா வில்சன்.

‘திருடன் பொலிஸ்,’ உள்குத்து’,’ கண்ணாடி’ படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜு. ரெஜினா கசான்ட்ரா நடிப்பில் சூர்ப்பனகை படத்தை இயக்கி வந்தார். எனினும் கொரானா தொற்று காரணமாக ஷூட்டிங் தொடர முடியவில்லை. அதே டீம்முடன் இணைந்து புதிய பிளான் போட்டு படத்தை முடித்துவிட்டார் இயக்குனர் கார்த்திக் ராஜு.

குறைவான படக்குழுவினருடன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டுத் திரும்பியுள்ளது படக்குழு. படப்பிடிப்புக்கு முன்பும், பின்பும் படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாம்.

ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டை இயக்குநராக திலீப் சுப்பராயன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., எடிட்டராக் சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ‘சூர்ப்பனகை’ படத்தின் தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மா இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார்.

இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோருக்கு இடையே ஒரே இரவில் நடைபெறும் கதையாகும்.  “தி சேஸ்” என தலைப்பு வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது. ஹாலிவுட் பட ஸ்டைலில் உள்ளது இந்த பர்ஸ்ட் லுக்.

the chase raiza wilson

OTT பிலாட்பார்முக்காக பிரத்யேகமாக எடுக்கப்பட்ட படம் என்றே தோன்றுகிறது.

Continue Reading
To Top