Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லாக் டவுனில் 18 நாளில் திரில்லர் படத்தில் நடித்து முடித்த ரைசா வில்சன்! இயக்குனர் யார் தெரியுமா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்த ரைசா வில்சன் ‘ஆலிஸ்’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘ஹாஸ்டக் லவ்’ , “FIR” ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். கொரானா தொற்று காரணமாக ஷூட்டிங் செல்லாமல் இருந்துள்ளார்.

‘திருடன் பொலிஸ்,’ உள்குத்து’,’ கண்ணாடி’ படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜு. ரெஜினா கசான்ட்ரா நடிப்பில் சூர்ப்பனகை படத்தை இயக்கி வந்தார். எனினும் கொரானா தொற்று காரணமாக ஷூட்டிங் தொடர முடியவில்லை.

இந்நிலையில் அதே டீம்முடன் இணைந்து புதிய பிளான் போட்டாராம் இயக்குனர். அது பற்றி கார்த்திக் ராஜு கூறியிருப்பதாவது:

Kannadi Movie Stills With Caarthik Raju

“வேல்ராஜ் சார் ), திலிப் சுப்பராயன் (சண்டைப் பயிற்சியாளர்), சாம் சிஎஸ் , சாபு ஜோசப் (எடிட்டர்) மற்றும் நான், நாங்கள் ஏதாவது ஆக்கப்பூர்வமாகச் செய்யவேண்டும் என தீர்மானித்தோம். குறைவான படக்குழுவினருடன் படப்பிடிப்பை நடத்த நாங்கள் அனுமதி பெற்றோம். என்னுடைய ‘சூர்ப்பனகை’ படத்தை தயாரித்த ராஜ்சேகர் வர்மா இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இந்தக் கதைக்கு ஏற்ற களமாக இருந்தது. கொரோனா தொற்று இல்லாத அந்த கிராமத்தில் 500-க்கும் குறைவான குடும்பங்களே வசிக்கிறார்கள். படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டது. முழுபடப்பிடிப்பும் முடித்து திரும்பிவிட்டோம், தற்போது எடிட்டிங் வேலைகளும் முடிந்துவிட்டது. டப்பிங் பணிகள்  தொடங்கவுள்ளது.

இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு இளைஞர் ஆகியோரை பற்றிய படம்.  தமிழ் பதிப்பில் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் தெலுங்கில் சத்யம் ராஜேஷ், மது நந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எமோஷனல் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top