Tamil Cinema News | சினிமா செய்திகள்
யுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

ரைசா கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் பிரபலமானவர். பாலிவுட் விளம்பரங்கள்,மற்றும் பாலிவுட் சீரியல்களில் நடித்து வந்த ரைசா, தனுஷி-இன் வி.ஐ.பி -2 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் ரைசா. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு பல சினிமா வாய்ப்புகள் இவருக்கு குவிந்தது. யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ‘பியார் பிரேம காதல்’ படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்தார். படம் பம்பர் ஹிட் அடித்தது.

PPK team pyaar prema kaadal
2019ல் வெளியாக இருக்கும் இயக்குநர் பாலாவின் வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் ஹீரோயினாகவே வரும் இவரின் ரோல். இந்நிலையில் இவர் நடிக்கும் புது பட தலைப்பு மற்றும் பார்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஆலிஸ் / ALICE
Launching the first look of our next at 6pm today stay tuned @YSRfilms @raizawilson @irfanmalik83 @KProductionsInd
— Yuvanshankar raja (@thisisysr) January 14, 2019
YSR பிலிம்ஸ் சார்பில் யுவன் தயாரித்த முதல் படம் PPK . தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிக்கும் மூன்றாவது படம் தான் ஆலிஸ். மணி சந்துரு என்பவர் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு எழில் அரசு. எடிட்டிங் அர்ஜுனன் நாகா கவனிக்கிறார்.

Raiza Wilson in Alice
உடலில் இருந்து தலை தனித்து உள்ளது. மேலும் கண்களும் கட்டப்பட்டது போல் உள்ளது போஸ்டர். ரைசா காலுக்கடியில் முயல் வேறு உள்ளது. ஹீரோயினை மையப்படுத்தும் படமா, என்ன ஜானர், யார் இசை என பல கேள்விகளை நமக்கு தருகின்றது இப்போஸ்டர்.
கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தையும் யுவன் டேக் செய்துள்ளார். எனவே க்ராப்கிஸ் சமாச்சாரத்தில் பட்டைய கிளப்பும் இப்படம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எனினும் Alices adventures in wonderland நாவலின் பாணியில் பாண்டஸி படமா ? அல்லது நம் கோலிவூட்டுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஹாரர் ஜானரா என்பதனை பொறுத்திருந்து தான் தெரிந்து கொள்ளவேண்டும்.
