தமிழகத்தில் தென் மாவட்டங்களிலும், கடலோர பகுதிகளிலும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் மழை வெளுத்து வாங்கப் போவதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்துப்போனதையடுத்த கடும் வறட்சி நிலவுகிறது. ஏற்கனவே தமிழநாடு வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படுட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை சீசனில் ஓரளவுதான் தமிழகத்திற்கு மழை கிடைக்கும்.ஆனால் வடகிழக்கு பருவமழைதான் தமிழகத்தின் விவசாயம், குடிநீர் போன்றவற்றை ஈடுசெய்யும்.

ஆனால் இந்த ஆண்டு மழை முற்றிலும் பொய்த்துப் போனதால், விவசாயம் அடியோடு இல்லாமல் போனது. மழை கிடைக்குமா என தமிழக விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இன்று முதல் இரு நாட்களுக்கு, தென் மாவட்ட கடலோர பகுதிகளிலும், அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, வடக்கு கடலோர மாவட்டங்களிலும்,கன மழை வெறுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழை வரலாற்றில் இடம் பெறும் அளவுக்கு இருக்கும் என்றும் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.