சிஎஸ்கே டீம்மில் இருந்து விலகியதன் காரணம் இது தான்! வைரலாகுது ரெய்னாவின் பேட்டி

Mr IPL என்ற செல்ல பெயரு க்கு சொந்தக்காரர் சுரேஷ் ரெய்னா. தோணியை போலவே இவருக்கும் தமிழத்தில் தனி ரசிகர் வட்டம் உண்டு. சின்ன தல ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்மின் முக்கிய வீரர் என்பதனை விட ஒரு படி மேல் என்று தான் சொல்ல வேண்டும்.

அனைவரும் ஆர்வமாக ஐபிஎல் 2020 நோக்கி இருந்த சமயத்தில். தனது தனிப்பட்ட காரணம் என கூறி துபாயில் பயோ பபிலில் இருந்து ரெய்னா இந்தியா திரும்பினார். இந்த சீசன் தான் சி எஸ் கே டீம் பிளே ஆப் செல்லாத ஒரே வருஷம். நம்பர் 3 பொசிஷனில் ரெய்னா ஆடாததே முக்கிய காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இவரது கலக்கல் பீல்டிங், பந்து வீச்சு என அனைத்தையும் மிஸ் செய்தனர்.

அந்த நேரத்தில் ஹோட்டல் அறையில் வசதிகள் இல்லை என்ற கருத்து வேறுபாடு காரணமாக அணி நிர்வாகம் மற்றும் தோனியுடன் விரிசல் ஏற்பட்டு விலகியதாக தகவல் பரவியது. அது பற்றி சிஎஸ்கே நிர்வாகமோ, ரெய்னாவோ இதுவரை பேசவில்லை. சீனிவாசன் அவர்கள் ரைனா பற்றி அந்த சமயத்தில் சில கருத்துக்களை சொல்ல பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் ஆனது.

இந்நிலையில் தற்பொழுது அவர் ஐபிஎல் தோரில் இருந்து விலகியது பற்றி கூறியுள்ளது பின்வருமாறு … “என்ன வருத்தம் இருக்கப் போகிறது? நான் என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டேன் மற்றும் குடும்பத்தினருக்கு தேவையான தருணத்தில் உடன் இருந்தேன்.

suresh raina

என் குடும்பதுக்காகவே நான் வர வேண்டும் என நினைத்தேன். பஞ்சாபில் ஒரு சம்பவம் நடந்தது. அவர்கள் நான் இங்கே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். என் மனைவி பெருந் தொற்றுநோய் சமயத்தில் இங்கே இருக்க வேண்டும் என நினைத்தார்.

நான் 20 வருடமாக விளையாடுகிறேன், மறுபடி விளையாடுவேன் என எனக்கு தெரியும். அனால் குடும்பத்தில் தேவை என்ற சூழல் எழும் சமயத்தில் உடன் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த சமயத்தில் அதுவே புத்திசாலித்தனமான முடிவு என நான் நினைத்தேன்.” என்றார் ரெய்னா.

சி எஸ் கே டீம்மில் தான் ரெய்னா இந்த சீசன் விளையாடுவார் என நிர்வாகமும் சொல்லியுள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை பெற்றுள்ள ரெய்னா உத்திரபிரதேச டீமுக்காக சயீத் முஸ்தாக் அலி கோப்பையில் விளையாடவுள்ளார்.