தேடிவந்த மழை நீரை தேக்கி சேமிக்க வக்கில்லை..! இவர்களா ஓடி வரும் ஆற்று நீரில் அணைகட்ட போகிறார்களா..? - Cinemapettai
Connect with us

Cinemapettai

தேடிவந்த மழை நீரை தேக்கி சேமிக்க வக்கில்லை..! இவர்களா ஓடி வரும் ஆற்று நீரில் அணைகட்ட போகிறார்களா..?

rain

தேடிவந்த மழை நீரை தேக்கி சேமிக்க வக்கில்லை..! இவர்களா ஓடி வரும் ஆற்று நீரில் அணைகட்ட போகிறார்களா..?

மழை நீரை கூட சேமிக்க வசதி செய்யாத ஆட்சியாளர்களா பாய்ந்து வரும் ஆற்றில் அணை கட்ட போகிறார்கள்..?

ஊட்டியில் நேற்று மதியம் பெய்த பலத்த மழையால் படகு கோடப்பமந்து கால்வாயில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

மேலும் ஊட்டி ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்திற்குள்ளும் மழைநீர் புகுந்து தேங்கியது.

படகு இல்ல சாலையில் ஆறு போல் மழைநீர் தேங்கி நின்றதால் இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

பலத்த மழை காரணமாக கிரீன்பீல்டு, சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

சுமார் 1 அடி உயரத்திற்கு தேங்கி நின்ற மழை நீரை பொதுமக்கள் வாளி கொண்டு இறைத்து வெளியேற்றினர். இதேபோல் ஊட்டி மார்க்கெட் பகுதிகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது.

ஆரம்பத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆலங்கட்டிகளை கைகளில் ஆர்வமுடன் எடுத்து பார்த்தனர்.

சிறிது நேரத்தில் இந்த மழை பலத்த மழையாக பெய்தது.

பின்னர் மாலை 3.30 மணி வரை விடாமல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், ஒரு மழை நீரை சேமிக்க கூட கால்வாய் வசதி ஏற்படுத்தாமல் இப்படி வீணடித்த செயல் ஆட்சியாளர்களின் மீது உள்ள நம்பிக்கையை ஆட்டம் காண செய்து விட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top