Connect with us
Cinemapettai

Cinemapettai

rai-laxmi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முகத்திற்கு நேரே உறுமும் புலி, கதறும் ராய் லட்சுமி.. செம வைரலாகும் மிருகா பட போஸ்டர்

ஒருகாலத்தில் பரபரவென முன்னோக்கி வந்த ராய் லட்சுமி தற்போது தமிழ் சினிமாவில் ஆளே அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விட்டார். இந்தியில் பிசியாக இருக்கிறார் என்கிறார்கள்.

இந்நிலையில் நீண்ட நாள் கழித்து ராய்லட்சுமி தமிழில் மிருகா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காட்டிற்குள் புலியிடம் மாட்டிக் கொள்ளும் பெண்ணின் கதை போல இந்த படத்தில் போஸ்டர் நமக்கு தெரியப்படுத்துகிறது. ராய் லட்சுமியின் முகத்திற்கு நேரே புலி உறுமும் காட்சி படத்தில் படு பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள்.

miruga-railaxmi-firstlook

miruga-railaxmi-firstlook

ராய் லட்சுமி ஒரு காலத்தில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் ஒரு பாடலுக்கு நடனமாடும் கவர்ச்சி நடிகையாக மாறினார். வாய்ப்பு இல்லாத இவருக்கு தேடித்தேடி வாய்ப்பு கொடுத்தவர் ராகவா லாரன்ஸ் தான்.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ள ராய் லட்சுமிக்கு எங்குமே முன்னணி நடிகை ரேஞ்சுக்கு பில்டப் கிடைக்கவில்லை. இதனால் தட்டுத்தடுமாறி ஹிந்தி பட வாய்ப்பு ஒன்றை பிடித்தார்.

தற்போது ஹிந்தியில் கவர்ச்சி காட்டேரியாக வலம் வருகிறார். சமீபத்தில் ராய் லட்சுமி நடிப்பில் வெளியான பாய்சன் 2 என்ற வெப்சீரிஸில் சக நடிகருடன் மூச்சு முட்டும் அளவுக்கு நெருக்கமான காட்சிகளில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top