பெட்ரோல் பங்க்குகளில் கையடக்க கருவி மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து எளிதாக எரிபொருளை ஆட்டையை போட்ட சம்பவம் போலீசார் நடத்திய சோதனையில் அம்பலமாகி உள்ளது.

உத்தரபிரதேசத்தின் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் அளவில் பெரிய மோசடி நடப்பதை தனியார் தொலைக்காட்சி ஒன்று ரகசிய ஆய்வு நடத்தி வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதுகுறித்து, சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், அம்மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள், பெட்ரோல் பங்க்குகளில் அதிரடி சோதனை நடத்தியதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிகம் படித்தவை:  காலா படத்தை பார்க்க டாப் காரணங்கள் இதோ...

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் சுமார் 12 பெட்ரோல் பங்க்குகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் 7 பெட்ரோல் பங்க்குகளில் சிப் எனப்படும் கையடக்க அளவிலான மின்னணு கருவி ஒன்றை பெட்ரோல் வழங்கும் கருவியில் பொருத்தி மோசடி செய்தது அம்பலமானது.

இந்த கருவி மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பினால், அதில் 50 – 60 மில்லி குறைவாக வாகனங்களில் நிரப்பும் வகையில் மோசடி செய்ய முடியும்.
பெட்ரோல் நிரப்பும் கருவியில் உள்ள மின்னணு திரையில் வழக்கமான எரிபொருள் அளவும், விலையும் காட்டும். ஆனால், லிட்டருக்கு 6 சதவீதம் வரை குறைவாகவே நிரப்பும். ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பினால், அதில் 940 மில்லி மட்டுமே வாகனத்தில் நிரப்பப்படும்.

அதிகம் படித்தவை:  அய்யயோ ஒரே நேரத்தில் மூன்றா? அஞ்சலி என்ன செய்தார் தெரியுமா?

இதனைதொடர்ந்து, பெட்ரோல் பங்க்குகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளுக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச அரசு தொடர்ந்து இதுபோன்ற பல அதிரடி சோதனைகள் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.