fbpx
Connect with us

பாகுபலி தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடி சோதனை.! சிக்கிய 50 கோடி ..

bahubali-producer-raid

News | செய்திகள்

பாகுபலி தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடி சோதனை.! சிக்கிய 50 கோடி ..

இந்தியாவின் பிரமாண்ட படமாக கருதப்படும் பாகுபலி படத்தை தயாரித்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த ஷோபு யாலகட்டா, மற்றும் பிரசாத் தேவி நேனி. சுமார் 200 கோடியில் தயாரிக்கப்பட்ட பாகுபலி 500 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியது. தற்போது 300 கோடி ரூபாய் செலவில் பாகுபலி இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார்கள். முதல் பாகத்தின் லாப பணத்தில் இரண்டாம் பாகம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சுமார் 25 பேர் ஒரே நேரத்தில் பாகுபலி தயாரிப்பாளர்களின் அலுவலம், மற்றும் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் படத் தயாரிப்பு செலவிற்காக மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் பல ஆவணங்களையும் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்றும் சோதனை நடைபெறும் என்று தெரிகிறது.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top