Connect with us

Cinemapettai

பெண் சைக்கோவாக ஸ்ரீகாந்த், கவர்ச்சி ராய் லட்சுமி, வேட்டையாடும் புலி.. மிரட்டலாக வந்த மிருகா ட்ரைலர்

mirugaa-cinemapettai

Videos | வீடியோக்கள்

பெண் சைக்கோவாக ஸ்ரீகாந்த், கவர்ச்சி ராய் லட்சுமி, வேட்டையாடும் புலி.. மிரட்டலாக வந்த மிருகா ட்ரைலர்

ஒருகாலத்தில் பரபரவென முன்னோக்கி வந்த ராய் லட்சுமி தற்போது தமிழ் சினிமாவில் ஆளே அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விட்டார். இந்தியில் பிசியாக இருக்கிறார் என்கிறார்கள்.

இந்நிலையில் நீண்ட நாள் கழித்து ராய்லட்சுமி தமிழில் மிருகா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காட்டிற்குள் புலியிடம் மாட்டிக் கொள்ளும் பெண்ணின் கதை போல இந்த படத்தில் போஸ்டர் நமக்கு தெரியப்படுத்துகிறது. ராய் லட்சுமியின் முகத்திற்கு நேரே புலி உறுமும் காட்சி படத்தில் படு பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள்.

ராய் லட்சுமி ஒரு காலத்தில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் ஒரு பாடலுக்கு நடனமாடும் கவர்ச்சி நடிகையாக மாறினார். வாய்ப்பு இல்லாத இவருக்கு தேடித்தேடி வாய்ப்பு கொடுத்தவர் ராகவா லாரன்ஸ் தான்.

அதேபோல் நண்பன் படத்திற்கு பிறகு ஸ்ரீகாந்த் நடிப்பு இந்த படத்தில் பேசப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பெண்களை வேட்டையாடும் சைக்கோ போல் உள்ள ஸ்ரீகாந்த் புலியிடம் மாட்டிக் கொள்கிறார் என்ற சந்தேகத்தையும் இந்த டிரைலர் எழுப்புகிறது.

கிராபிக்ஸ் புலி என்பது அப்பட்டமான தெரிந்தாலும் இந்த படம் குழந்தைகளுக்கு பிடிக்கும் படமாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதோ ட்ரைலர்:-

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top