Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன்னை படுக்கைக்கு அழைத்த ஹீரோ.. ராகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட பகீர் தகவல்
தமிழ் சினிமாவில் மீட்டு பெரும் பிரச்சனையாக வெளிவந்தது, சில நடிகைகள் தங்களுக்கான பிரச்சினையை சமூக வலைத்தளங்களில் வைரலாக வெளியிட்டனர். தெலுங்குப்பட நடிகை ஸ்ரீரெட்டி சில நடிகர்களின் பெயரை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
இதற்கு எந்த நடிகர்,இயக்குனர் எதிர்ப்பு தெரிவிக்கப் படவில்லை, இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் ராகுல் ப்ரீத் சிங்கிற்கு பிரச்சினைகள் இருப்பதாக சில தகவல்களை வெளியிட்டார். ஆனால் இதனை மறுப்பு தெரிவித்த ராகுல் ப்ரீத் சிங் தற்போது தானும் இது போன்ற பிரச்சினைகளை சந்தித்ததாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தன்னை ஒரு நடிகர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த ஹீரோ யார் என்பதை அவர் கடைசிவரை சொல்லவில்லை. அவர் இதனை டீசண்டாக கேட்டதாகவும் தான் அதனை மறுப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இது போன்ற பிரச்சனைகள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது.
பெண்களுக்கான பாதுகாப்பை சினிமாத்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். சினிமா துறையில் ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும், இதுபோன்று முன்னணி நடிகைகளின் வளர்ச்சிக்கு ஒருபோதும் இது போன்ற பிரச்சனைகள் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என்பதே அவர்களின் கோரிக்கை.
