fbpx
Connect with us

நாங்க தயார் பண்ணுனா தரமா தான் இருக்கும்.. காலரைத் தூக்கி சிஷ்யர்களை களமிறக்கிய ராகுல் டிராவிட்!

Sports | விளையாட்டு

நாங்க தயார் பண்ணுனா தரமா தான் இருக்கும்.. காலரைத் தூக்கி சிஷ்யர்களை களமிறக்கிய ராகுல் டிராவிட்!

இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் 1996ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். டெஸ்ட் தொடர் என்றால் எதிரணியின் நினைவிற்கு வரும் வீரர் என்றால் அது டிராவிட் மட்டும்தான்.

கிளென் மெக்ராத், சோயிப் அக்தர், பிரட் லீ, ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், வாசிம் அக்ரம் போன்ற நம்பர் ஒன் பவுலர்கள் கண்டு நடுங்கும் ஒரே பேட்ஸ்மேன் டிராவிட்.

சச்சின் டெண்டுல்கர் என்ற ஒருவர் கிரிக்கெட்டில் இல்லை என்றால், ராகுல் டிராவிட் தான் கிரிக்கெட்டின் கடவுளாக இருந்திருப்பார்.கிரிக்கெட்டில் டெஸ்ட் மேட்ச் ஆடும் அனைத்து நாடுகளுக்கு எதிராக செஞ்சுரி அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை கொண்டுள்ளவர்.

2012ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அதன்பின் பிசிசிஐ அவரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக அமைப்பதற்கு பரிந்துரைத்தது.

தற்போது அண்டர்19 அணிக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்திய அணிக்காக பல இளைஞர்களை உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு ஒரு ரோல் மாடலாகவும் விளங்குகிறார்.

சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், மயங்க் அகர்வால், நவ்தீப் சைனி, சுபம் கில், இசான் கிசான், கமலேஷ் நாகர் கோட்டி போன்ற இளைஞர்களை இந்திய அணிக்காக உருவாக்கியுள்ளார்.

keepers-indian-team

Continue Reading
To Top