fbpx
Connect with us

Cinemapettai

2007 டி20 உலக கோப்பையில் சச்சின், கங்குலி விலக இவர்தான் காரணமா? ஒற்றை வார்த்தையில் ஓரங்கட்டிய ஜாம்பவான்கள்

Sports | விளையாட்டு

2007 டி20 உலக கோப்பையில் சச்சின், கங்குலி விலக இவர்தான் காரணமா? ஒற்றை வார்த்தையில் ஓரங்கட்டிய ஜாம்பவான்கள்

2007 இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத ஆண்டு தான். இனிப்பும் கசப்பும் ஒரு சேர நடந்த வருடம் அது. வெஸ்ட் இண்டீசில் மார்ச் ஏப்ரலில் 50 ஓவர் உலகக்கோப்பையில் படு தோல்வி அடைந்து வெளியேறியது இந்தியா. ஆனால் செப்டெம்பரில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த டி 20 உலகக்கோப்பையை வென்று அசத்தியது.

முற்றிலும் புதிய பார்மட். சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கிடையாது. கேப்டனாக தோனி, மேனேஜராக லால் சந்த் ராஜ்புட் செயல்பட்டனர்.

அந்த டீம் பைனலில் பாகிஸ்தானை வென்று கோப்பையை கை பற்றியது. அப்பொழுது மேனேஜராக இருந்த ராஜ்புட் சில சுவாரஸ்ய நிகழ்வுகளை பிரபல தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்தில் ஆடிய டீமிற்கு ராகுல் டிராவிட் தான் கேப்டன். சில வீரர்கள் அங்கிருந்து நேரடியாக டி20 கோப்பைக்கு தென் ஆப்பிரிக்கா செல்லும் சூழல் இருந்தது.

சச்சின் மற்றும் கங்குலியிடம் ராகுல் தான், நாம் இளம் வீரர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுப்போம், நாம் மூவரும் விளையாட வேண்டாம் என முன்மொழிந்துள்ளார். மேலும் அவர்களை சம்மதிக்கவும் வைத்தாராம்.

அந்த தொடரில் தோனி நாம் (இந்திய டீம்) டென்ஷன் ஆகக்கூடாது, பிற டீம்மை நாம் டென்ஷன் அடைய வைக்க வேண்டும் என வீரர்களிடம் சொல்லியுள்ளார். அதுமட்டுமன்றி பேசுபவர்கள் பேசட்டும், நாம் நமது பலத்தின் மீது நம்பிக்கை வைத்து விளையாடுவோம் எனவும் வீரர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாகவே தான் அந்த டீம் முதல் முயற்சியில் கோப்பையை தட்டி சென்றது.

Continue Reading
To Top