fbpx
Connect with us

பட்லரை மான்கட் முறையில் அவுட்டாக்கிய அஸ்வின் பற்றி ராகுல் டிராவிட் தெரிவித்த கருத்து இது தான்.

Sports | விளையாட்டு

பட்லரை மான்கட் முறையில் அவுட்டாக்கிய அஸ்வின் பற்றி ராகுல் டிராவிட் தெரிவித்த கருத்து இது தான்.

ஐபில் சீசன் 12 இன் 4- காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை, மான்கட் முறையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார்.

ஐபில் பொறுத்தவரை சீசன் ஆரம்பத்தில் சதம் அடித்த பேட்ஸ்மேன், வேகமான 50 , ஹாட் ட்ரிக் விக்கெட், சூப்பர் கேட்ச் என்று தான் பொதுவாக பேசுவோம். ஆனால் இம்முறை அஸ்வின் அடித்த ரன் அவுட், அணைத்து விஷயங்களையும் மறக்கடிக்க வைத்து விட்டது. அஸ்வின் செய்தது தவறா அல்லது சரியா என்பதே விவாதப்பொருள் ஆகிவிட்டது. இந்நிலையில் பலரும் அஸ்வின் இது ஜென்டில் மேன் கேம் என்பதை மறந்துவிட்டார். கிரிக்கெட்டின் ஸ்பிரிட் செத்து போச்சு என்றெல்லாம் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மூத்த கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தன் பதிலை தந்துள்ளார்.

ashwin jos butler

அஷ்வினின் ஜென்டில் மேன் இமேஜ் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதே அந்த கேள்வி.

பலர் பூதாகரமான ரியாக்ஷன் கொடுத்து இந்த விஷயத்தை பெரிதாக்கி விட்டனர். அஸ்வினின் குணாதிசயத்தோடு ஒப்பிடுவது தவறு. அவருடைய பார்வையில் அவர் செய்தது சரி, நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது அவசியம் இல்லை, அதனால் அவர் கெட்டவர் என சொல்லக்கூடாது.

ஆனால் முதலில் அவர் ஒரு வார்னிங் கொடுத்திருக்கலாம், அதை அவர் செய்ய விரும்பவில்லை. அதில் நீங்கள் பிரச்சனை கண்டுபிடிப்பதற்கு ஒன்றுமில்லை.

அவர் ஜென்டில்மேன் அல்லது கிடையாது என பேசுவதற்கு ஒன்றுமில்லை, மேலும் அவரின் குணத்துடன் ஒப்பிடுவதும் நியாயம் இல்லை. அவர் கிரிக்கெட் ரூல்ஸ் புத்தகத்தை படித்துள்ளார். அதன் படி தான் நடந்தார். யாரையும் அவர் ஏமாற்றவும் இல்லை கெட்ட மனிதரும் கிடையாது.” என ராகுல் டிராவிட் பதில் தந்துள்ளார்.

அவ்வளவு தான் இதற்கு மேல் இதில் பேச என்ன பாஸ் இருக்கு. விட்டுட்டு இன்றைய மேட்ச் பாருங்க மக்களே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top