அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மெர்சல்,படம் பிரம்மாண்டமாக உருவாக்குகிறார்கள் இப்படம் ரசிகர்குக்கு ஒரு பெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஞாயிறு அன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விஜய் நடித்த மெர்சல் படப்பாடல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கம் முழுவதும் ரசிகர்களால் திக்குமுக்காடித்தான் போனது. திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.mersal audio teaser 1இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். அவர் பேசும்போது,ஆளப்பிறந்தவன் தமிழன் என்ற பாடல் எங்களோட அஸ்பிரேஷன். அதை நீங்க உண்மையாக்கணும் என்று விஜயை பார்த்து தன் பங்கிற்கு பேசினார்.

ரசிகர்கள் சத்தத்தால் அந்த வரிகள் சரியாக சென்றதா தெரியவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதனை கவனித்தால் ரகுமானையும் ஒரு லிஸ்ட்டில் வைத்து விடுவார்கள் என்பதே உண்மை.