நிலவே மலரே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரஹ்மான். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து ரகுமானுக்கு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
ஒரு காலத்தில் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ரஹ்மான். அதன்பிறகு சரிவர பட வாய்ப்புகள் அமையாமல் தொழில்துறையில் கவனம் செலுத்தி வந்தார். பின்பு அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தில் ஜெகதீஷ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.
அதன் பிறகு பில்லா 2 சூர்யாவுடன் சிங்கம் 2 ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார். தற்போது கை வரிசையாக 6 படங்களை வைத்துள்ளார்.சர்வதிகாரி, ஜன கன மன, நாடக மேடை, துப்பறிவாளன் 2 மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரகுமான் தனது பிறந்தநாளை தன் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்குக் காரணம் ரஹ்மான் குடும்பத்தினர் எந்த ஒரு பட வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ளாததால் எந்த ரசிகரும் ரஹ்மான் மனைவியையும், குழந்தைகளையும் பார்த்ததில்லை.
அதுமட்டுமில்லாமல் ரஹ்மான் பார்க்க சிறு வயது போல் இருக்கிறார். ஆனால் இவருக்கு இரண்டு பெரிய மகள்கள் உள்ளார்களா? என ஒரு சில ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இவர்கள் விரைவில் சினிமாவிற்கு நடிக்க வந்து விடுவார்கள் போல எனவும் கூறி வருகின்றனர்.