Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமா டைரக்டரானார் ஏ.ஆர்.ரஹ்மான்! ஆரம்பமானது ஷுட்டிங்!
உலகமே வியந்து நோக்கும் ஒரு தமிழன், தன் காலடியை வைக்கும் போது எவ்வளவு கவனமாக வைப்பார்? அப்படிதான் வைத்திருக்கிறார் ரஹ்மான். துனிஷியா நாட்டில் 20 கேமிரா செட்டப்புகளுடன் தன் படப்பிடிப்பை ஆரம்பித்த ரஹ்மான், அப்படத்தில் தனது திறமைக்கு சற்றும் சளைக்காத கலைஞர்களை பணியாற்ற வைத்திருக்கிறாராம். அவ்வளவு பேரும் இன்டர்நேஷனல் பெருமைக்குரியவர்கள். விர்சுவல் ரியாலிடி ஸ்டைலில் இப்படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிகின்றன.
அதென்னய்யா விர்சுவல் ரியாலிடி? வேறொன்னுமில்ல… நம்ம கோச்சடையான் படம் வந்திச்சுல்ல? அந்த வகை ஸ்டைல்!
ரஜினி நடிச்சாக… தீபிகா படுகோனே நடிச்சாக…. சரத்குமார் நடிச்சாக… சுமன் நடிச்சாக… என்று வரிசைப்படுத்தப்பட்ட அந்த படத்தில் வந்த பொம்மைகள், வருஷக்கணக்கில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த கொடுமையை மறுபடியும் அனுபவிக்கணுமா என்று கண்ணை கசக்காதீங்க மகா ஜனங்களே… ரஹ்மான் இயக்கும் படத்தில் அப்படியெல்லாம் அபத்தம் இருக்காது என்று நம்பலாம்.
படம் வெளியாக அட்லீஸ்ட் ஒன்றரை வருஷமாவது ஆகுமாம்! அதுவரையும் ஏ.ஆர்.ரஹ்மான் புதுப்படங்களுக்கு இசையமைக்க மாட்டார் என்பது ஒரு யூகந்தேன்….!
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
