Connect with us

Cinemapettai

ரகுல் ப்ரீத் மிஸ் செய்த பெரிய படங்கள்… அப்போது அவர் என்ன செய்தார் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரகுல் ப்ரீத் மிஸ் செய்த பெரிய படங்கள்… அப்போது அவர் என்ன செய்தார் தெரியுமா?

தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பரிச்சயமான ரகுல் ப்ரீத் சிங், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கும் அவர், தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தமிழ், தெலுங் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது நடிப்பால் ரகுல் ப்ரீத் சிங் முத்திரை பதித்திருக்கிறார். தற்போது சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. மற்றும் மேலும் 2 தமிழ் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில், என்.ஜி.கே. படம் சூர்யா – செல்வராகவன் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் கடந்த் 2014-ம் ஆண்டு அய்யாரி படம் மூலம் பாலிவுட் என்ட்ரி கொடுத்த அவர், தற்போது அஜய் தேவ்கான் மற்றும் தபு நடிக்கும் ரொமாண்டிக் காமெடி படம் ஒன்றில் பிஸியாக நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்கும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.

படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ரகுல், தனது கேரியரின் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய தோல்விகளைச் சந்தித்தவர், ஆனால், அந்த தோல்விகள் கற்றுக்கொடுத்த பாடத்தை இதுவரை மறக்காமல் அவர் பாடமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் முன்னணி நாயகர்களான மகேஷ் பாபு, ராம்சரண் என அத்தைனை பேருடனும் ரகுல் நடித்து விட்டார். பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ரகுல் ப்ரீத் சிங்கின் கால் ஷீட்டுக்காக இப்போ வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். இந்த நிலையில், தனது சினிமா கேரியர் குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அவர் பேசும்போது, “சினிமாவில் எதுவுமே எனக்கு ஈஸியாகக் கிடைக்கல. முதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும், வெற்றிகளையும் மிகவும் கஷ்டங்களிடையில்தான் பெற்றேன். என்னால வேலை பார்க்காம சும்மா இருக்க முடியாது. அதோடு சினிமா உலகம் எனக்கு நிறைய கற்று கொடுத்துள்ளது. தமிழ் படங்களில் அதிகம் நடிக்கிறேன். இந்தி, கன்னட பட வாய்ப்புகளும் வந்துள்ளன. .

சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்கிறது. ஆரம்பத்தில் வாழ்க்கை இறங்குமுகமாக இருந்தது. அப்போது சவால்களையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டதாலேயே இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன். கடந்த 10 மாதங்களில் 3 பெரிய பட வாய்ப்புகள் எனது கைகளுக்கு வந்து திடீரென்று பறிபோய் விட்டது. அதைப் பார்த்து வேதனையில் முடங்கி விடாமல், சவாலாக ஏற்று கஷ்டப்பட்டு உழைத்ததால் முன்னேறினேன். எல்லோரும் சவால்களை எதிர்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்’ என்று ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுக்கிறார் ரகுல்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top