ரோகினிக்கு முன்பே பிரபல நடிகையை காதலித்த ரகுவரன்.. பல வருடம் கழித்து வெளியான உண்மை

வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உயரமும், குரல் வளமும் உடையவர் நடிகர் ரகுவரன். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த இவருக்கு வில்லன் கதாபாத்திரம் தான் சரியாக வரும் என்பதை உணர்ந்து தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் ரஜினிக்கு வில்லனாக பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியாக மிரட்டு இருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரகுவரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இந்நிலையில் தன்னுடன் நடித்த சக நடிகை ஆன ரோகினியை ரகுவரன் காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

Also Read :நல்ல கதை, ஹீரோ அமைந்தும் படுதோல்வியான படம்.. ரகுவரன் நடிப்பில் அசத்தியும் பயனில்லை

இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ரோகிணிக்கு முன்பே ரகுவரன் பிரபல நடிகை ஒருவரை காதலித்தார். அதாவது ரகுவரன் நடிப்பில் கூட்டுப் புழுக்கள் என்ற படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா நடித்திருந்தார்.

அப்போது ரகுவரனுக்கு அமலா மீது காதல் மலர்ந்துள்ளது. ஆனால் ரகுவரன் படப்பிடிப்பிலேயே மிகவும் கோபமாக நடந்து கொள்வாராம். அதுமட்டுமின்றி புகை மற்றும் மது பழக்கம் இருந்ததால் அமலா ரகுவரின் காதலை மறுத்துவிட்டார். மேலும் தனது காதலை அமலா மறுத்ததால் அதிகமாக புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்திற்கு ரகுவரன் அடிமையானார்.

Also Read :முட்டி போட்டு நடித்த ரகுவரன்.. பல வருடங்களுக்குப் பிறகு சீக்ரெட்டை உடைத்த ரேவதி

அதன் பின்பு அமலா நாகார்ஜுனாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார். மேலும் ரகுவரனும் பின்பு ரோகினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அமலாவை ரகுவரன் ஒருதலையாக காதலித்தார் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது.

திருமணத்திற்கு பின்பு தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த அமலா கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கொடுத்துள்ளார். அதாவது தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான கணம் படத்தில் அமலா நடித்திருந்தார். இந்தப் படம் அமலாவின் பிறந்தநாள் அன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read :அடுத்த ரகுவரன் நீங்கதான் சார்.. சிம்பு பட பிரபலத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

- Advertisement -spot_img

Trending News