Connect with us
Cinemapettai

Cinemapettai

raguvaran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

6 பாடல்களை தானே இசையமைத்து, பாடியுள்ள ரகுவரன்.. கல்லுக்குள்ளே ஈரமா என வியந்து பார்த்த திரையுலகம்!

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானாலும் எதிர்நாயகன் வேடங்களால் ரசிகர்கள் பலரின் மனதை கவர்ந்தவர் தான் நடிகர் ரகுவரன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு முக்கிய அந்தஸ்தை உருவாக்கிக் கொண்டார்.

தற்போது ரகுவரன் நம்முடன் இல்லை என்றாலும் சினிமாவில் வில்லனாக துடிக்கும் பலருக்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் ரகுவரனின் நீண்ட நாள் ஆசை ஒன்று தற்போது வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது ஸ்டைலிஷ் வில்லனாக திரைத்துறையை மிரளவைத்த ரகுவரன், சினிமாவில் இசையமைப்பாளராக வேண்டும் என்பதை தான் லட்சியமாகக் கொண்டு இருந்தாராம். ஆனால் ரகுவரனின் லட்சியம் திசைமாறி நடிப்பில் சென்று விட்டதாம்.

இருந்தபோதிலும் ரகுவரன் தன்னுடைய ஆசைக்காக ஆறு பாடல்களை தானே இசையமைத்து, அவரே பாடியுள்ளாராம்.

எனவே, சிறந்த நடை, குரல், பண்பேற்றம், பாவனை போன்றவற்றைக் கொண்ட ரகுவரனுக்குள் இப்படியும் ஒரு திறமை உள்ளதா என்று திரையுலகே வியந்து பார்த்தது. மேலும் ரகுவரனின் இசையில் அவரே பாடிய பாடல்களை கேட்க,

Continue Reading
To Top