சின்னகவுண்டரின் வாரிசை கை தூக்கி விட்ட லாரன்ஸ்.. உண்மை முகத்தை  தோலுரித்து காட்டிய தளபதி

Raghava Lawrence will make a guest appearance in Vijayakanth’s son: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இரு நடிகர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் புரட்சி கலைஞராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் கேப்டன் விஜயகாந்த்.  

இவரைப் போலவே இவரது மகன்கள் விஜய பிரபாகரன் அரசியலிலும் சண்முக பாண்டியன் சினிமாவிலும் தங்களது பங்கை ஆற்றி வருகின்றனர். 

சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சில படங்கள் நடித்து இருந்தாலும் கேப்டன் மாதிரி திரையில் சொல்லிக் கொள்ளும் படி அவரது வளர்ச்சி அமையவில்லை என்பதை உண்மை.

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சண்முக பாண்டியனுக்கு, அவர் நடிப்பில் உருவான படைத்தலைவன் படக்குழுவின் சார்பாக பர்த்டே ஸ்பெஷல் ஆக டீசர் வெளியிடப்பட்டது. 

விஜயகாந்த் மகன் நடிக்கும் படத்தில்  கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுக்கும் ராகவா லாரன்ஸ் 

சினிமாவை தாண்டி பொது சேவையிலும் நாட்டம் கொண்ட கேப்டன் உடல்நல குறைவு காரணமாக கடந்த ஆண்டு இயற்கை எய்தினார். அவரது மறைவு தமிழகத்தையே உலுக்கியது எனலாம்.

கேப்டன்  மறைவின் போது திரைத்துறையினர் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். 

அது மட்டும் இன்றி நடிகர் ராகவா லாரன்ஸ் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு அவர் படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸில் நடிப்பதாக வாக்கு கொடுத்து சென்றார்.

சொல்லியது போலவே சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்திற்கு மூன்று நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

விஜயகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ்  இருவருக்கும் இடையே நட்பு வட்டாரம் எதுவும் இல்லாத போதும் மரியாதை நிமித்தமாகவும்,  தமிழ் சினிமாவிற்கு கேப்டன் அவர்கள் ஆற்றிய தொண்டை கருத்தில் கொண்டும் ராகவா அவரது மகனுக்கு உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதியோ தன் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட கேப்டனை கண்டு கொள்ளாதது மட்டுமன்றி, அவரது வாரிசை கை தூக்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை என்றே கூறலாம்.

ஆரம்ப காலங்களில் விஜய் நடித்த படங்கள் அவ்வளவாக பிரபலமாகாத நிலையில், விஜய்யின் தந்தை சந்திரசேகர் கேட்டு கொண்டதன் பேரில் நட்புக்காக செந்தூரப் பாண்டியன் திரைப்படத்தில் செந்தூரப் பாண்டியனாக கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தார் விஜயகாந்த்.

பட விழாக்களின் போதும் ப்ரோமோஷனின் போதும் முன்னணி நடிகர் என்ற கௌரவம் இல்லாமல் நடிகர் விஜய்க்கு அதிகமாக போஸ்டர் வைத்து பிரபலம் ஆக்கினார் விஜயகாந்த்.

முன்னணி நடிகர்கள் யாவரும் செய்ய தயங்கும் செயலை நட்புக்காக செய்தார் விஜயகாந்த்.

இன்று அரசியலுக்காக பல நலத்திட்டஉதவிகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்க போராடும் தளபதி, தனக்கு உதவி செய்தவரை கூட நினைத்து பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார் விஜய்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மூன்று இலக்க கோடிகளில் சம்பளம் வாங்கும் தளபதி  தன்னை தூக்கி விட்ட வரை மறந்து நன்றி இல்லாதவரானார் என்பதே நிஜம்.

இதன் மூலம்  அரசியலுக்காக மட்டுமே மக்களிடையே வேஷம் போடும் தளபதியின் உண்மையான முகம் தோலுரிக்கப்பட்டது என்றே கூறலாம்.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -