Tamil Cinema News | சினிமா செய்திகள்
டேய்! நான் ராயபுரம்காரண்டா.. அவசரத்தில் வாய்விட்டு மாட்டிக்கொண்ட ராகவா லாரன்ஸ்
ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் ரஜினியை புகழ்ந்து பேசுகிறேன் என்று நினைத்துக்கொண்டு கமல்ஹாசன் போஸ்டரில் சாணி அடித்தேன் ஒரு மாதிரி பேசி விட்டார் ராகவா லாரன்ஸ். அதனால் அவருக்கு வந்த சிக்கல் இன்னும் போகவில்லை.
அந்த ரஜினி நிகழ்ச்சி முடிந்து வெளி வந்தவுடன் சீமான் ராகவா லாரன்சை பற்றி தாறுமாறாக பேச, பதிலுக்கு ராகவா லாரன்ஸ் சீமானுக்கு திருப்பி பதிலடி கொடுக்க நெருப்பு பற்றிக்கொண்டது. அதில் கமல் ரசிகர்களும் சேர்ந்துகொள்ள திரும்பவும் ராகவா லாரன்ஸுக்கு சிக்கல் வந்துவிட்டது. ஏனென்றால் ராகவா லாரன்ஸ் உணர்ச்சிவசப்பட்டு பேசும்பொழுது, நீங்கள் தமிழன் என்றால் நாங்கள் என்ன அமெரிக்கா காரனுக்கா பொறந்தோம் என்று ஒரு மாதிரி ராகவா லாரன்ஸ் பேசிவிட்டார்.
அந்த நேரத்தில் அவருடைய விக்கிபீடியா பக்கத்தில் பார்க்கும்போது அவருடைய பிறப்பிடம் ஆந்திரா என்று இருந்தது. ஆனால் இப்பொழுது அதனை ராயபுரம் தமிழ்நாடு என்று மாறியுள்ளது. இன்னும் அது சிவப்பு நிறத்தில் தான் உள்ளது அப்படி என்றால் அதனை விக்கிபீடியா ரிவீவ் செய்து வருகிறது. இதனை அவரே அவசரமாக மாற்றினாரா? அல்லது வேறு எவரும் மாற்றினார்களா என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

raghava-lawrence-birth-place
இதற்கு சீமான் மற்றும் கமல் ஆதரவாளர்கள் ‘அந்த நிகழ்ச்சிக்கு முன் அவர் ஆந்திராவில் பிறந்தவராக இருந்தார் அந்த நிகழ்ச்சி முடிந்தபின் தமிழ்நாட்டில் பிறந்தவராக மாறி விட்டாரா?என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அரசியலில் களமிறங்கும் லாரன்ஸ் என்ற செய்தி வேறு பரவி வருகிறது இதெற்கெல்லாம் ராகவா லாரன்ஸ் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று பார்க்கலாம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
