எஸ்.பி.பி நலம் பெற பிரார்த்தனை செய்யும் ராகவா லாரன்ஸ். நெகிழ வைக்கும் புகைப்பட தொகுப்பு உள்ளே

இசை சாம்ராஜ்யத்தை தமிழ் சினிமாவுக்கு உருவாக்கிய முக்கிய பங்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உண்டு. தலைமுறைகளைத் தாண்டிய ஒரு இசைப்பயணம் என்றே கூறலாம். அவர் குரலில் மயங்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இவரின் பாடல்களுக்கு இன்று வரை கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள எஸ்பி பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தகவல் இணையத்தில் வெளியானது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் இவர் நல்லபடியாக உள்ளதாகவும், யாரும் வதந்திகளை பரப்பாதீர்கள் என அவரது மகன் சரண் நேற்று வீடியோ வெளியிட்டார். பல்வேறு நடிகர் நடிகைகள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாலசுப்பிரமணியம் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Raghava Lawrence prays for SPB

மாஸ்டர் ராகவா லாரன்ஸ் 7 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை நினைவு கூர்ந்து ட்விட்டரில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார். SPB அவர்கள் டிரஸ்டில் உள்ள குழந்தைகளை சந்தித்து தானே உணவு வழங்கினார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.

SPB

நானும் எனது குழந்தைகளும் அவர்  குணமடைய இறைவனை பிராத்திப்பதாக பதிவிட்டுள்ளார் லாரன்ஸ்.

பிராத்திப்பதாக

எழுந்து வா எஸ் பி பி.