fbpx
Connect with us

Cinemapettai

இந்தமுறை ராகவா லாரன்ஸ் பேயை வைத்து இயக்கவில்லை.! பின்பு எதை எடுக்கிறார் தெரியுமா?

Raghava-Lawrence

News | செய்திகள்

இந்தமுறை ராகவா லாரன்ஸ் பேயை வைத்து இயக்கவில்லை.! பின்பு எதை எடுக்கிறார் தெரியுமா?

நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா போன்ற படங்களில் பேயை மையமாக வைத்து படங்களை இயக்கி அதில் வெற்றி கண்டார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா போன்ற படங்களில் பேயை மையமாக வைத்து படங்களை இயக்கி அதில் வெற்றி கண்டார். சமீபத்தில் இவர் இயக்கிய காஞ்சனா 3 திரைப்படம் ரசிகர்களிடம் விமர்சனத்துக்கு ஆளாகி ஏனென்றால் முந்தைய படங்களில் வந்த காட்சி போலவே இந்தப்படத்தில் இருப்பதாக பலர் ரசிகர்களும் கூறி வந்தனர்.

ஆனால் தற்போது அவர் ஒரு புது முயற்சிகளைத் கையாள உள்ளார். காஞ்சனா 3 படத்தின் முடிவில் நான்காவது பாகத்தின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். அதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் பேயா என கேள்வி கேட்டு வந்தனர்.

அதற்கு ராகவா லாரன்ஸ் தற்போது பதில் அளித்துள்ளார். ராகவா லாரன்ஸ் கால பைரவா என்கிற பெயரில் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் பேயை வைத்து இயக்குவதற்கு பதிலாக பாம்பை மையமாக வைத்து இயக்குவதாக கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்கள் அப்ப படம் வித்தியாசமாகத்தான் இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது என்று கூறலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top