Connect with us
Cinemapettai

Cinemapettai

raghava-lawrence

Tamil Cinema News | சினிமா செய்திகள்

OTTயில் மண்ணை கவ்விய ராகவா லாரன்ஸ் படம்.. படு மோசமாக வந்த விமர்சனங்கள்

ராகவா லாரன்ஸின் முதல் ஹிந்தி படமே படுதோல்வியை சந்தித்து உள்ளதால் சோகத்தில் இருக்கிறாராம்.

ராகவா லாரன்ஸ் டான்ஸ் மாஸ்டராக பழமொழிகளில் பிரபலமாக இருந்தாலும் ஹீரோவாக தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டுமே பிரபலம்.

மேலும் ராகவா லாரன்ஸ் நடித்த பெரும்பாலான படங்கள் அவர் இயக்கி நடித்தது. அதிலும் பேய் படங்களின் லிஸ்ட் தான் அதிகம்.

தமிழ் ரசிகர்களுக்கு காமெடி கலந்த பேய் படங்கள் மிகவும் பிடிப்பதால் அதேபோல் ஹிந்தி ரசிகர்கள் விரும்புவார்கள் என நினைத்து பல்பு வாங்கி உள்ளார்.

தமிழில் ராகவா லாரன்ஸ் லட்சுமி ராய் நடித்த காஞ்சனா படத்தின் இந்தி பதிப்பில் லட்சுமி என்ற பெயரில் அக்ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாக்கியிருந்தார்.

படத்தின் டிரைலருக்கு எதிர்பார்ப்பு இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் காமெடி காட்சிகளுக்காக செயற்கையாக செய்த பல விஷயங்கள் ஹிந்தி ரசிகர்களை கவரவில்லை யாம்.

அக்ஷய் குமாரின் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு மோசமான விமர்சனத்தை எந்த படமும் சந்தித்தது இல்லை என்ற பெயரை பெற்றுள்ளதாம் லட்சுமி. இந்த படம் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

raghava lawrence

Continue Reading
To Top