Connect with us

Cinemapettai

மீண்டும் காஞ்சனா ரீமேக்கில் லாரன்ஸ்..? தன்மானத்துக்கு கிடைத்த பரிசு

kanjana

Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் காஞ்சனா ரீமேக்கில் லாரன்ஸ்..? தன்மானத்துக்கு கிடைத்த பரிசு


தமிழில் நல்ல வரவேற்பு பெற்ற காஞ்சனா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

ராகவா லாரன்ஸ் இப்படத்தை அக்ஷய் குமாரை வைத்து  இயக்குவதாகவும் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  வெளியிட்டனர் மற்றும் அந்த படத்திற்கு ‘லஷ்மி பாம்’ என்று பெயரிட்டனர்.

ஆனால் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டது தனக்கு தெரியாது என்றும் மரியாதை குறைவான இடத்தில் நான் வேலை பார்ப்பதில்லை என்றும் தயாரிப்பாளரிடம் நேரடியாக ராகவா லாரன்ஸ்  தெரிவித்துவிட்டார்.

ஆனால் தற்போது தயாரிப்பாளர்கள் ராகவா லாரன்சின் சென்னையில் நேரில் பார்த்து சமாதானம் செய்ததாகவும் படத்தை மீண்டும் இயக்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தன்மானத்திற்கு ஒரு இழுக்கு என்றால் தலையே போனாலும் செய்ய மாட்டேன் என்று கூறியது போல் நடந்து கொண்டார். இதனால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.

மீண்டும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கில் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top