Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன் தம்பிக்காக ராகவா லாரன்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு. அட சூப்பர் பா இவரு !
ராகவா லாரன்ஸ்
டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்று சினிமாவில் பன்முகங்களை கொண்டிருந்தாலும் மனிதாபிமானம் உள்ள நடிகர் என்றே நம்மில் பலரால் அறியப்பட்டவர். சினிமாவை தவிர்த்து இவர் செய்யும் செயல்களை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியாது. அதற்க்கு சினிமாபேட்டை சார்பில் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் அண்ணா.
எல்வின்
காஞ்சனா 2 படத்தில் “சில்லாட்ட பில்லாட்ட”, பாடலில் ‘கூப்பிட்றா தம்பிய’ என லாரன்ஸ் அழைக்க அதிவேக என்ட்ரி கொடுப்பார் அவரது தம்பி எல்வின். இதுவே அவரின் சினிமா அறிமுகம்.

Raghava Lawrence – Elvin
நேற்று எல்வின் தன் பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் “என் தம்பி எல்வினை இந்த ஆண்டு நாயகனாக அறிமுகப்படுத்த உள்ளேன். உங்களுடைய ஆசியும் ஆதரவும் தேவை” என்று தன் ட்விட்டரில் கூறியுள்ளார் லாரன்ஸ்.
Hi dear Friends and Fans..! Today is my brother’s birthday. this year I’m introducing him as hero. Need all your wishes and blessings.. pic.twitter.com/yog1OhK2TS
— Raghava Lawrence (@offl_Lawrence) June 21, 2018
விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
