fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பெண்ணை டார்ச்சர் செய்து நாடக காதல்.. வசமா சிக்கிய லாரன்ஸ் தம்பி.. மேடைல நல்லது பேசினா மட்டும் போதாது சார்

ragava-lawrance

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பெண்ணை டார்ச்சர் செய்து நாடக காதல்.. வசமா சிக்கிய லாரன்ஸ் தம்பி.. மேடைல நல்லது பேசினா மட்டும் போதாது சார்

நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகி இயக்குனராகவும் நடிகராகவும் பல சாதனைகளை படைத்து வருபவர் ராகவா லாரன்ஸ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களை இயக்கி வருகிறார்.

தற்போது ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் வினோத் என்பவரும் சினிமாவில் நடிக்கத் துவங்கியுள்ளார். மேலும் பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார். ராகவா லாரன்ஸ் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்

அப்படி ஒரு படத்தை இயக்கும் போது அதில் அவரது தம்பி எல்வின் பணியாற்றியுள்ளார். அப்போது சக நடிகை ஒருவரின் மீது காதல் வயப்பட்ட எல்வின் அவருடன் பேச்சுக் கொடுக்கத் தொடங்கி உள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த நடிகையை காதல் டார்ச்சர் செய்து உள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் அந்த நாயகி எல்வினின் டார்ச்சர் தாங்க முடியாமல் பொறுமையை இழந்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பிறகு எல்வின் தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த நடிகையை விபச்சாரி என்று கூறி சிறையில் அடைத்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அந்த நடிகை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும் அதிர்ச்சி அடைய செய்யும் செய்திகள் வெளிவந்துள்ளது. பணம் செல்வாக்கு இருந்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சினிமாவில் செய்யலாம் என்ற கலாசாரம் மேலோங்கி வருவது இதுபோன்ற செயல்களால் வெளிச்சத்திற்கு வருகிறது.

ராகவா லாரன்ஸ் சமீபகாலமாக ரஜினி கட்சியில் சேர்ந்து அரசியலில் எப்படியாவது ஒரு இடத்தை பிடித்துவிட வேண்டும் என நினைத்து பிரபல தலைவர்களை மேடையில் தாக்கிப் பேசி தன்னுடைய அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவரது தம்பி ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அவரது அரசியல் அத்திவாரத்தை அசைத்துப் பார்த்துவிட்டது என்றே சொல்லலாம்.

ஊனமுற்றவர்களை காப்பாற்றும் லாரன்ஸ் தன்னுடைய தம்பியை கண்டிப்பாரா என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top