ஊருக்கு மட்டும் தான் உபதேசம் போல.. நம்பி வந்தவர்களை நடுத்தெருவில் நிப்பாட்டிய ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பதற்கு முன்பாகவே நடன கலைஞராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். மிகவும் வறுமையில் இருந்த ராகவா லாரன்ஸ் தான் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகள், ஏழை மாணவர்கள் உள்ளிட்டோருக்கு தனது ராகவேந்திரா டிரஸ்ட் மூலமாக நிதி திரட்டி பலருக்கு உதவி வருகிறார்.

மேலும் தற்போது ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருவதால் தனது டிரஸ்ட்டுக்கு யாரும் நிதியளிக்க வேண்டாமெனவும் தன்னிடம் பணம் உள்ளது, அதை வைத்து இனி வரும் காலங்களில் பார்த்துக்கொள்கிறேன் என அவரே தெரிவித்தார். இப்படி பல நல்லெண்ணங்களை கொண்ட ராகவா லாரன்ஸ் அவருடன் பணியாற்றியவர்களை கண்டுக்காமல் இருப்பது தான் சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.

Also Read: ரஜினி முன்னாடியே இந்த படம் ஓடாது எனக் கூறிய ராகவா லாரன்ஸ்.. கடுப்பாகி சூப்பர் ஸ்டார் எடுத்த முடிவு

அண்மையில் ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி ஷங்கர், சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ருத்ரன் திரைப்படத்தை இயக்குனர் கதிரேசன் இயக்கி, தயாரித்தார். ஜி.வி.பிரகாஷ் , தரன் குமார் உள்ளிட்டோர் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் செம ஹிட்டானது. இதனிடையே இப்படத்தில் பின்னணி நடன கலைஞராக பணியாற்றியோர் சிலர் தற்போது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்.

கிட்டத்தட்ட 10 நாட்கள் ருத்ரன் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு தாங்கள் நடனமாடியதாகவும், எங்களுக்கான சம்பளம் தற்போது வரை கொடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் கூறியுள்ளனர். மேலும் பணம் இல்லாததால் தாங்கள் தங்கியுள்ள அறைக்கு கூட வாடகை கட்ட முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்த அவர்கள், இதுகுறித்து படக்குழுவில் இருந்து யாரும் உதவ முன்வரவில்லை என தெரிவித்தனர்.

Also Read: ராகவா லாரன்ஸ் வலை வீசிய 4 நடிகைகள்.. வெளிப்படையாகவே டேமேஜ் செய்த ஹீரோயின்

மேலும் பேசிய அவர்கள் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை நம்பித்தான் நாங்கள் சென்றோம், அவர்கூட எங்கள் நிலைபற்றி தெரிந்தும் இதுவரை ஒரு வார்த்தைக்கூட கேட்காமல் உள்ளார் என வருத்தத்துடன் தெரிவித்தனர். இதன் காரணமாக தயாரிப்பாளர் மீது தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம், கூடிய விரைவில் எங்களுக்கான சம்பளத்தை வாங்கித் தருமாறு நடன கலைஞர்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.

இதனிடையே மற்றவர்களுக்கு உதவி செய்து வாழுங்கள் என ஊருக்கே உபதேசம் செய்யும் ராகவா லாரன்ஸ் இப்படி நம்பி வந்தவர்களை நடுரோட்டில் நிப்பாட்டியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடித்த நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை வாரி வழங்கிய ராகவா லாரன்ஸ், இப்படி அன்றாட வேலையை நம்பி இருப்போரை கஷ்டப்படுத்துவது சற்றுக்கூட நியாயம் இல்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: அதிகமாய் செகண்ட் பார்ட் நடித்த 5 ஹீரோக்கள்.. அரைச்ச மாவையே அரைத்த ராகவா லாரன்ஸ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்