ராகவா லாரன்ஸ் பாகுபலி புகழ் இயக்குநர் ராஜமவுலி மற்றும் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத்தின் உதவியாளர் இயக்க உள்ள காஞ்சனா 3 படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா படங்களின் வெற்றியை அடுத்து, தற்போது உருவாக உள்ளது காஞ்சனா 3.

அதிகம் படித்தவை:  பொன்ராம் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

இந்தப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் ஒளிபரப்பு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராகவேந்திரா புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்க இருப்பதாகவும், படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதிகம் படித்தவை:  ஜல்லிக்கட்டு போலவே கஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவும் ராகவா லாரன்ஸ்.. 50 வீடுகள்!

மேலும் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்வும் எதிர்பார்க்கப்படுகிறது.