raghava-lawrance-nayantharaகாஞ்சனா 2 படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் பைரவி, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்கவுள்ளார்.

ஐங்கரன் தயாரிக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடிப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் இரட்டை வேடத்தில் நடிப்பார் எனவும் தகவல் கசிந்துள்ளது.