லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ரிமேக். படத்தில் விஸ்வாசம் கனெக்ஷன் . சரத்குமார் ரோலில் நடிக்கப்போவது யார் தெரியுமா ?

மாஸ்டர் ராகவா லாரென்ஸின் சூப்பர் ஹிட் பட வரிசை தான் முனி /காஞ்சனா. தற்பொழுது காஞ்சனா 3 வெளியாகி ஹிட் அடித்துள்ளது. சில பல நாட்களாகவே இப்படத்தின் முந்தய பாகத்தின் (முனி 2 / காஞ்சனா) பாலிவுட் ரிமேக் பற்றிய பேச்சுகள் வந்த வண்ணம் இருந்தது.

இப்படத்திற்கு லக்ஷ்மி பாம் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியுள்ளது. மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அக்‌ஷய் குமாரை வைத்து பாடல் ஒன்றை படம் எடுத்து வருகிறார். லாரன்ஸ் ரோலில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமாரின் திருநங்கை ரோலில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். கிரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும் ஒளிப்பதிவாளராக விவேகம், விஸ்வாசம் படங்களில் பணியாற்றிய வெற்றி கமிட் ஆகியுள்ளார்.

Leave a Comment