fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வெற்றிமாறனுடன் கூட்டணியில் பேய் பட நடிகர்.. வித்தியாசமான காம்போவா இருக்கே

vetrimaran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெற்றிமாறனுடன் கூட்டணியில் பேய் பட நடிகர்.. வித்தியாசமான காம்போவா இருக்கே

இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற வித்யாசமான கதைகளின் மூலம் வெற்றி கண்டவர். மேலும் இவ்வாறு தனுஷுக்கு தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் சூரி வைத்த விடுதலை படத்தை இயக்கி வருகிறார். தற்போது வெற்றிமாறனின் கதையில் பேய் பட நடிகர் நடிக்க உள்ளார்.

ராகவா லாரன்ஸ் முனி படத்தை தொடர்ந்து பேய் படங்களிலேயே நடித்து வந்தார். மேலும் பேய் படங்களையும் நகைச்சுவையுடன் கொடுக்க முடியும் என்ற ட்ரெண்டை மாற்றியவர் இவர்தான். இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து இப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை எடுத்த அதிலும் வெற்றி கண்டார்.

இவ்வாறு பேய் படங்களிலேயே நடித்து வந்த லாரன்ஸ் இயக்குனர் எஸ் கதிரேசன் தயாரித்து, இயக்கும் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், நாசர் நடிக்கின்றனர்.

கடந்த ஆண்டு லாரன்ஸின் அதிகாரம் படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது. அப்போது கொரோனா உச்சத்தில் இருந்ததால் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இதனால் அதிகாரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. இந்நிலையில் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளதால் அதிகாரம் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கயுள்ளது.

இப்படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய செந்தில்குமார் இயக்குகிறார். இப்படத்தின் கதையை வெற்றிமாறன் தான் எழுதி உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக உருவாக உள்ளது.

மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். அதிகாரம் படத்தை முடித்த கையோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இதற்கு முன்னதாக ஐஸ்வர்யா மற்றும் லாரன்ஸ் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகயுள்ளது. லாரன்சுக்கு பேய் படங்கள் மட்டுமே கை கொடுத்து வந்த நிலையில் சற்று வித்தியாசமான முயற்சியில் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் இது எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பது படம் ரிலீசான பிறகே தெரியும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top