Tamil Cinema News | சினிமா செய்திகள்
250 கோடி வசூல் அள்ளிய தெலுங்கு பட ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் ஸ்பேர் பார்ட்ஸ் காலியாகிடும் மாஸ்டர்!
சமீபகாலமாக சொந்த கதைகளைவிட ரீமேக் படங்களில் நடிக்க பல நடிகர் நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்சினிமாவில் சூப்பர் ஹிட்டாகும் படங்களை ரீமேக் செய்வதை போல தமிழிலும் மற்ற மொழி படங்களை ரீமேக் செய்து வருகின்றனர்.
இந்த லாக்டோன் சமயத்தில் பல பிரபலங்கள் பல மொழித் திரைப்படங்களைப் பார்த்து அதில் வெற்றி பெற்ற பல படங்களின் ரீமேக் உரிமையை கையில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் வசூலை குவித்த முன்னணி நடிகர் ஒருவரின் படத்தை ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராம் சரண், சமந்தா நடிப்பில் உருவாகி 250 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை புரிந்த திரைப்படம் ரங்கஸ்தலம். கிராமத்து கமர்ஷியல் கதாபாத்திரங்களை வைத்து உருவான இந்தப் படம் மிகப் பெரிய வசூல் சாதனை படைத்தது.
அந்த படத்தில் பிரபல தமிழ் நடிகர் ஆதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ரங்கஸ்தலம் படத்தில் ராம் சரணுக்கு காது கேட்காத கதாபாத்திரம். அதை அவ்வளவு அழகாக நடித்து கொடுத்து இருப்பார்.
தற்போது ரங்கஸ்தலம் படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ராகவா லாரன்ஸ் இந்த கதாப்பாத்திரத்திற்கு செட் ஆவாரா என்பதையும் ரசிகர்கள் கமெண்ட்டுகள் தெரிவிக்கலாம்.
