fbpx
Connect with us

Cinemapettai

ராகவா லாரன்ஸ்-என் தலைவர பத்தி தப்பா பேசாத.. அவர் எந்த நாட்டு தலைவர்.. சீமான் பதிலடி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ்-என் தலைவர பத்தி தப்பா பேசாத.. அவர் எந்த நாட்டு தலைவர்.. சீமான் பதிலடி

நார்மலாகவே சீமான் அரசியல் தலைவர்களை தாக்கிப் பேசுவது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர் மரியாதை கொடுத்து பேசி இதுவரை யாரும் பார்த்ததில்லை.

சமீபத்தில் நடந்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் அவர் மீது பாய்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ஸ்டாலின், எடப்பாடி போன்றவர்கள் இதுவரை யாரையும் தாக்கிப் பேசியது இல்லை. தலைவர்களுக்கான நல்ல குணமே அடுத்தவர்களை மதிப்பதுதான் என்று கூறியுள்ளார்.

மேலும் ஒரே ஒரு கட்சியின் தலைவர் மட்டும் தரக்குறைவாகவே தொடர்ந்து பேசிவருகிறார். இது நல்லதுக்கு இல்ல. என் தலைவரை பேசினால் நானும் திருப்பி பேசுவேன் என மேடையில் அரசியல் தீயை பற்ற வைத்துள்ளார்.

இதற்கு சீமானும் சூடாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, நான் என் நாட்டுக்காக பேசுகிறேன். அவர் எதற்காக பேசுகிறார், எந்த நாட்டுக்காக சப்போர்ட் செய்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை என ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்.

ரஜினி ரசிகர்களிடம் சீமானை பற்றி பேசி அவர் மீது வெறுப்பை உண்டாக்க பார்க்கிறாரா லாரன்ஸ் என மேல்மட்ட அரசியல் தலைவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top