நடிகர் ராகவேந்திரா லாரன்ஸின் ரசிகர் கடலூரை சேர்ந்த ஆர்.சேகர். லாரன்ஸை நேரில் சந்தித்து புகைப்படம் எடுப்பதற்காக சென்னை வரும் போது விபத்து ஏற்பட்டு எதிர்பாராத விதமாக இறந்து போனார். இதனால் லாரன்ஸ் வருத்தமடைந்து ரசிகர்கள் யாரும் தன்னை சந்திக்க சென்னை வரவேண்டாம் என லாரன்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

Raghava Lawrence_Help_Farmers
Raghava Lawrence

இந்நிகழ்வு குறித்து லாரன்ஸ் இட்ட பதிவு, ‘என்னை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்க எனது ரசிகர்களில் ஒருவரான கடலூரை சேர்ந்த ஆர்.சேகர் சென்னை வரும் போது விபத்தில் இறந்து போனார்..

அதிகம் படித்தவை:  டிவிட்டரில் கேவலமாக கேள்வி கேட்ட ரசிகர்.! அதே பாணியில் பதிலடி கொடுத்த குஷ்பூ.! என்ன கொடுமை டா இது?

அவரது குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறியதுடன் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டேன். அவரது இழப்பு எனக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்தி விட்டது. அதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்.

Lawrence Raghava

இனி எந்த ஒரு ரசிகரும் என்னை பார்க்க சென்னைக்கு வர வேண்டாம். வரும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க விரும்புகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் இருக்கும் இடங்களுக்கே நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

raghava lawrence

சந்திக்கும் இடம் நேரம் தேதி ஆகிய தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும். என்னுடைய ஓய்வு நேரத்தை உங்களுக்காக ஒதுக்க திட்டமிட்டுள்ளேன். அதன் முதல் கட்டமாக வரும் 7ம் தேதி புதன் கிழமை சேலத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைபடம் எடுத்துக் கொள்ள உள்ளேன். மேலும் சேகரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.