40 வருடத்திற்கு முன்னாடி சிரஞ்சீவியுடன் நடித்த புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா.. மலரும் நினைவுகள்

radhika-chiranjeevi
radhika-chiranjeevi

தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ராதிகா. முதல் படமே தாறுமாறாக ஓடி அவருக்கு வெற்றி நாயகி என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தற்போது வரை தன்னுடைய வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்களில் அவ்வப்போது மாறி மாறி நடித்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மற்ற மொழிகளிலும் ராதிகா பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் 1981ஆம் ஆண்டு சிரஞ்சீவிக்கு ஜோடியாக நியாயம் காவாலி என்ற படத்தில் நடித்திருந்தார்.

அந்த படம் வெளியாகி தற்போது 40 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய பழைய கால நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய நீண்டகால நண்பர் என சிரஞ்சீவியை குறிப்பிட்டு இந்த புகைப்படங்களை அவருக்கும் ஷேர் செய்துள்ளார். தெலுங்கில் வெளியான நியாயம் காவாலி திரைப்படம் தான் பின்னாளில் மோகன் நடிப்பில் விதி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

மோகன் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான விதி திரைப்படம் அந்த வருடத்தில் அதிக நாட்கள் ஓடிய படமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

niyayam-kavali-poster
nyayam-kavali-poster
Advertisement Amazon Prime Banner