போலீசாக நடிக்கிற அநேக ஹீரோக்கள் பின் மண்டையில் கொத்தாக முடி வைத்துக் கொண்டு திரிவதெல்லாம் நடிப்புக்கே செய்கிற துரோகம்! இன்னும் சிலர், ‘இதுபோதும் நீங்க கொடுக்கிற சம்பளத்துக்கு’ என்பது போலவே இருப்பார்கள்… நடிப்பார்கள். இவர்களுக்கெல்லாம் காலம் சுட்ட சங்கை எடுத்து கெட்ட நேரத்தில் ஊதி காதையே செவிடாக்கிவிடும். ஆனால் சின்னதும் பெரிசுமாக சுமார் நானூறு படங்களை தாண்டிவிட்ட ராதிகாவுக்கு இத்தனை அனுபவத்திற்கு பிறகும், தொழிலில் வைத்திருக்கிற அக்கறை இருக்கிறதே… அதற்கு தனியாக ஒரு கேசட் போட்டு ஊர் முழுக்க பாட விடலாம்.

அதிகம் படித்தவை:  வெளியானது அதர்வா முரளி நடிக்கும் 'பூமராங்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

வேறொன்றுமில்லை… உதயநிதி நடிக்கும் புதிய படம் ஒன்றை கவுரவ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் உதயநிதிக்கு அம்மாவாக நடிப்பவர் நம்ம ராதிகாதான். கதைப்படி அவர் அரசு பஸ் டிரைவராம். பஸ் ஓட்டுவது போல சில ஷாட்கள் எடுக்க வேண்டியிருந்ததாம். கார் ஓட்ட தெரிந்த ராதிகா சும்மா உட்கார்ந்து ஸ்டியரிங்கை திருப்பி பம்மாத்து காட்டினாலே, போதும் மேடம். பிரமாதம் என்று கூறிவிடுவார் டைரக்டர். ஆனால், ஒரு வாரம் பஸ் ஓட்டுவதற்காக முறைப்படி ட்ரெய்னிங் எடுத்தாராம் ராதிகா.

அதிகம் படித்தவை:  சென்னையில் இந்த தியேட்டரில் எல்லாம் இதான் டிக்கெட் விலை.! முழு டிக்கெட் விவரம் வந்தது..

ஒரு ஷாட்டா இருந்தாலும், அதில் ஒப்பேத்தல் இருக்கக் கூடாதுங்க. அதையும் முறைப்படி செய்யணும் என்று கூறிவிட்டாராம் ராதிகா. அப்புறமென்ன? ராதிகா பஸ் ஓட்டுவதை அவ்வளவு லைவ்வாக எடுத்துத் தள்ளிவிட்டார் கவுரவ்!

சும்மாவா… கிழக்கே போகும் ரயில்ல வந்த பொண்ணாச்சே? பஸ்செல்லாம் ஒரு கஷ்டமா?