Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பிடிக்காத மருமகள் கைப்பட்டாலும் கால் பட்டாலும் குற்றம் என்று சொல்வதற்கு ஏற்ப ஈஸ்வரி வந்ததால் ராதிகா மற்றும் அவருடைய அம்மாவிற்கு ரொம்பவே வெறுப்பாக இருக்கிறது. இதனால் என்ன பண்ணினாலும் அவரிடம் சண்டை போடும் அளவிற்கு ராதிகாவின் அம்மா வரிஞ்சு கெட்டிக்கிட்டு போய் நிற்கிறார்.
ராதிகாவிடம் கோபமாக பேசிய கோபி
ராதிகாவின் மகள் படித்துக் கொண்டிருக்கும் போது சாதாரணமாக ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கிறார். இதை தவறாக புரிந்து கொண்ட ராதிகாவின் அம்மா சண்டை இழுத்து ஈஸ்வரியை நோகடித்து விட்டார். இதனை தொடர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரிடம் வம்படியாக ராதிகா அம்மா சண்டை போடுகிறார்.
அதனால் ஈஸ்வரியும் பதிலடி கொடுக்கும் வகையில் சண்டை போடுவதால் வாக்குவாதம் பெரிய அளவில் ஆகிவிட்டது. அப்பொழுது ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்த ராதிகாவுக்கு ரொம்பவே தொந்தரவு ஏற்பட்டதால் கோபத்துடன் வந்து ஈஸ்வரி மற்றும் அம்மாவை திட்டிவிட்டார். இதனால் நொந்து போன ஈஸ்வரி எதுவும் பேசாமல் ரூமில் போயி அழுது கொண்டே படுத்து விட்டார்.
சமாதானப்படுத்த போன ராதிகா கூப்பிட்டும் ஈஸ்வரி எழுந்திருக்கவில்லை. உடனே ராதிகாவும் அப்படியே விட்டுவிட்டார். பிறகு கோபி இரவு நேரத்தில் சாப்பாடு கொண்டு வரும் பொழுது ராதிகா, உங்க அம்மா ரூம விட்டு வெளியே வரவே இல்லை. மதியத்தில் இருந்து சாப்பிடவும் இல்லை என்று சொல்லுகிறார். இதைக் கேட்டு பதறிப்போன கோபி, அம்மாவை தேடி போகிறார்.
உடனே அம்மாவை எழுந்திருக்க சொல்லி கூப்பிடுகிறார். ஆனால் ஈஸ்வரி எந்த சுயநினைவு இல்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். இதனால் பயந்து போன கோபி ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து போகிறார். இதை வெளியில் இருந்து பார்த்த செல்வி அக்கா பாக்கியாவிடம் போய் சொல்கிறார்.
உடனே பதறிப்போன பாக்யா, பேரன்கள் மற்றும் தாத்தா அனைவரும் மருத்துவமனைக்கு போகிறார்கள். அங்கே ஈஸ்வரியை பார்த்ததும் தாதா ரொம்பவே வருத்தப்படுகிறார். பிறகு மருத்துவர்கள் சொன்னது என்னவென்றால் சாப்பிடாமல் இருந்ததால் லோ சுகர் ஆகிவிட்டது. பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை, கூடிய சீக்கிரத்தில் கண் விழித்திடுவார்கள். அப்பொழுது எல்லோரும் போய் பாருங்கள் என்று கூறிவிட்டு போய்விடுகிறார்.
இதனை தொடர்ந்து ஈஸ்வரியை தன்னுடனே அழைத்து விட்டுப் போகலாம் என்று தாத்தா பாக்யாவிடம் சொல்கிறார். அதற்கு கோபி அதெல்லாம் இல்லை என்னுடைய அம்மா என்னுடன் தான் இருப்பாங்க என்று சொல்கிறார்.
ஆனால் இனியும் ஈஸ்வரி, கோபியை நம்பி ராதிகா வீட்டிற்கு போக வாய்ப்பில்லை. அதனால் ஈஸ்வரி பாக்யாவிடம் தான் தஞ்சம் அடையப்போகிறார். இதற்கிடையில் அம்மா இவ்வளவு கஷ்டப்படுவதற்கு காரணம் ராதிகா தான் என்று கோபி கோபத்தில் ராதிகாவை திட்டி விடுகிறார். இதனால் கோபத்தில் ராதிகா வீட்டிற்கு போய் அம்மாவிடம் சண்டை போடுகிறார். ஆக மொத்தத்தில் இந்த கோபியால் யாருமே நிம்மதி இல்லாமல் அலைகிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியலின் முந்தைய சம்பவங்கள்
- தலதெறித்து பாக்கியா வீட்டுக்கு ஓட போகும் பரிதாபம்
- Bhakkiyalakshmi: பாக்யா செஞ்ச முதல் உருப்படியான விஷயம்
- Bhakkiyalakshmi: கோபி வச்ச ஆப்பு பாக்கியாவுக்கு இல்ல ராதிகாவுக்கு