‘எமன்’ படத்தைத் தொடர்ந்து ‘அண்ணாதுரை’ மற்றும் ‘காளி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் விஜய் ஆண்டனி. இதில் ‘அண்ணாதுரை’ படத்தின் பணிகள் முழுமையாக முடிவுற்று நவம்பர் 30-ம் தேதி வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

vijay antony annathurai

விஜய் ஆண்டனி நடித்த ‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் ஆண்டனி, இயக்குனர் சீனிவாசன், தயாரிப்பாளர் ராதிகா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ராதிகா, ‘இயக்குனர் சீனிவாசன் இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னதும் நான் விஜய் ஆண்டனியிடம் கதை கூறி அவரிடம் சம்மதம் பெற சொன்னேன். நான் தயாரிக்கின்றேன் என்று கேள்விப்பட்டவுடன் விஜய் ஆண்டனி உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாக பின்னர் அறிந்த்தேன். அவருக்கு எனது நன்றிகள்

annadurai

விஜய் ஆண்டனியிடம் இரண்டு விஷயங்கள் நான் கவனித்தேன். ஒன்று உண்மை, இன்னொன்று உழைப்பு. இந்த இரண்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

என்னை எத்தனை மணி நேரம் வேலை செய்ய சொன்னாலும் செய்வேன், ஏனெனில் எனக்கு உழைப்பின் மீதுள்ள நம்பிக்கை. அதேபோல் எந்த விபரீதத்தையும் பற்றி கவலைப்படாமல் உண்மை பேசுவேன். அந்த உண்மை, உழைப்பை நான் விஜய் ஆண்டனியிடமும் பார்த்தேன்.

இந்த விஜய்ன்னு பேரு வச்சவங்க எல்லாருமே சூப்பர் ஆயிடுறாங்க. அது ஜோசப் விஜய்யாக இருந்தாலும் சரி, விஜய் ஆண்டனியாக இருந்தாலும் சரி. பார்ப்பதற்கு ஒன்றுமே தெரியாத அப்பாவிகளாக இருப்பார்கள், ஆனால் அவர்களிடம் தான் திறமை கொட்டி கிடக்கும்’ என்று பேசினார்.மேலும்

annadurai

அண்ணாதுரை’ படத்தை விளம்பரப்படுத்த முதல் 10 நிமிடக் காட்சிகளை வெளியிட விஜய் ஆண்டனி முடிவு செய்திருக்கிறார்

தற்போது இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளார் விஜய் ஆண்டனி. தனது ‘சைத்தான்’ படப் பாணியைப் போலவே ‘அண்ணாதுரை’ படத்தின் முதல் 10 நிமிடக் காட்சிகளை வெளியிட முடிவு செய்திருக்கிறார்.

annadurai

மேலும், அன்றைய தினத்தில் வெளியாகவுள்ள பாடல்களை ‘www.vijayantony.com‘ இணையதளத்தில் ரசிகர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி

‘அண்ணாதுரை’ படத்தில் விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா, மஹிமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார். ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.