radhika-sarathkumarவிஜயகாந்த் நடிகராக இருந்தபோது அவருடன் பல படங்களில் நடித்தவர் ராதிகா. அவருடன் நெருங்கிய பழகிய வாய்ப்பு இருந்ததால் அவருடைய பழக்கவழக்கங்களை தெரிந்தவர் என்ற முறையில் சமீபத்தில் விஜயகாந்தின் அரசியல் குறித்து ராதிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது ராதிகா பதில் கூறியபோது, “விஜயகாந்த் ஒரு நல்ல நடிகர். அதேபோல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர். ஆனால் ஒரு வாக்காளனாக இருந்து பார்க்கும்போது அரசியல் அவருக்கு சரிப்படாது என்றே தோன்றுகிறது.

அதிகம் படித்தவை:  தேர்தலில் தோற்ற கையோடு விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு !

தேமுதிக மாநாட்டில் அவர் பேசியதை சமீபத்தில் படித்தேன். அவர் என்ன பேசினார் என்றே புரியவில்லை. எனக்குத்தான் புரியவில்லை என்று என் கணவரிடம் காட்டி உங்களுக்காவது புரிகிறதா? என்று கேட்டேன். அவரும் படித்துவிட்டு சிரித்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்’ என்று கூறியுள்ளார்.