fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த வார ரிலீசில் ராதிகாவுக்கு பிடித்த படம் எது தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வார ரிலீசில் ராதிகாவுக்கு பிடித்த படம் எது தெரியுமா ?

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வரும் வழியை தமிழில் ஏற்படுத்திய முக்கிய பங்கு நடிகை ராதிகாவுக்கும் உண்டு. சினிமா ஹீரோயினாக ஜொலித்த ராதிகா, கடந்த 1994-ம் ஆண்டில் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். தமிழ் சீரியல் உலகில் பல புதுமைகளைப் புகுத்தினார்.

இன்று சினிமாவிலும் குணச்சித்திர வேடங்கள், சீரியல், தயாரிப்பு நிறுவனம் என செம்ம பிஸி இவர். இந்த வாரம் கென்னடி கிளப், பக்ரீத், மெய் என மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. அதில் கென்னடி கிளப் பற்றி தான் பாராட்டி ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

” மிகுந்த உத்வேகத்தை கொடுக்கும் படம். சுசீந்திரன் மற்றும் அவரின் டீம் சிந்தனையை தூண்டும் விதமான, எனர்ஜெட்டிக் படத்தை கொடுத்துள்ளனர். விளையாட்டு வீரர்களின் அனுபவிக்கும் சூழலை புரிந்துகொள்ள முடிகின்றது. சசிகுமார் மற்றும் பாரதிராஜாவின் ரோல் அருமையாக  உள்ளது . படம் எனக்கு மிகவும் பிடித்தது.” என தன் குருநாதர் படத்தை புகழ்ந்து ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top